அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என ஐ.பெரியசாமி மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு; குற்றச்சதி, நிதியிழப்பு இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தள்ளுபடியானதால், ED வழக்கும் தள்ளுபடி.
