திண்டுக்கல்லை அடுத்த பாலமரத்துப்பட்டியில் கருத்தம்மாள், பஞ்சவர்ணம், சுப்புலட்சுமி ஆகிய 3 பேரை 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கருத்தம்மாள், பஞ்சவர்ணம், சுப்புலட்சுமி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மேற்படி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது இடப் பிரச்சனை காரணமாக அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
