விருதுநகரில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அதிமுக வேட்பாளர் கணேசன் வந்திருந்தார். சிறிது நேரத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், அமைச்சர் தங்கம் தென்னரசு, ஏ ஆர் ஆர் சீனிவாசன் எம் எல் ஏ உள்பட பலருடன் வந்தனர். அப்போது திமுக அதிமுக வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. விருதுநகர் டிஎஸ்பி யோகேஷ் குமார், சட்டையில் இருந்த அவரது பெயர் கிழிக்கப்பட்டது. இதனால் விருதுநகர் தாசில்தார் அலுவலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
