சிவகாசி அருகே தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள், சந்தனபிரியாவின் ஆதரவோடு அதிமுகவினர் நுழைய முயன்றனர். அப்போது அங்கு திரண்ட தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள், அதிமுகவினரை காரில் இருந்து கூட இறங்க விடாமல் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர்.
புதிய தமிழகம் கட்சி யைச் சீண்டுவதும், தேவேந்திரகுல வேளாளர் மக்களைச் சீண்டுவதும் ஒன்றுதான்” என்று முழக்கமிட்ட இளைஞர்கள், அதிமுகவினரை அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடித்தனர்.
எடப்பாடி கே. பழனிசாமியின் ( Edappadi K. Palaniswami ) ஆணவப்போக்கிற்குத் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
