2026 தேர்தல் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனு பிரமாணப் பத்திரங்களில் கல்வித் தகுதி விவரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தவெக வேட்பாளர் சத்தியகுமார், விசிக வேட்பாளர் மாலதி உள்ளிட்டோர் குறிப்பிட்டுள்ள பட்டப்படிப்புகள் குறித்து சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பல படிப்புகள், முதுகலை இல்லாமல் பிஹெச்டி, ஆந்திரா பல்கலைக்கழக சட்டப்படிப்புகள் போன்ற விவரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
