வளைகுடா போர் காரணமாக வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும்.
தற்காலிகமாக இந்த விலை உயர்வு சுமையை மக்கள் மீது சுமத்தாமல் எண்ணெய் நிறுவனங்களே தாங்கிக் கொள்ள வேண்டும். சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
