பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளையொட்டி, கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில், “கழகங்கள் மறையட்டும்… இனி நம்ம கொடி பறக்கட்டும்” என்ற வாசகங்களுடன் ரஜினிகாந்த், அண்ணாமலை ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களில் ஒரு பகுதியினர் அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
