உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு ஜோதிமாணிக்கம் கிராம மக்கள், தங்கள் கிராமத்தை “உலக வாழும் பாரம்பரிய கிராமம்” ஆக பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர். 70,000 ஆண்டுகள் பழமையான மனித மரபணு மற்றும் பாரம்பரிய வாழ்வியல் தொடர்ச்சியாக இக்கிராமத்தில் உள்ளது என கூறி, UNESCO அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
