வாரத்தின் முதல் நாளான இன்று கடும் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.
ஈரான் போர் குறித்த நிச்சயமற்ற சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வர்த்தக நேரத் தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,066.36 புள்ளிகள் சரிந்து 72,516.86 என்ற நிலையை எட்டியது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 316.30 புள்ளிகள் குறைந்து 22,503.30-ஆக வர்த்தகமானது.
