2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குக் கிரிக்கெட் அணிகள் நேரடியாகத் தகுதி பெறுவதற்கான விதிமுறைகளை ஐசிசி (ICC) வெளியிட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 2026 டிசம்பர் 31 தரவரிசைப்படி முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். போட்டியை நடத்தும் அமெரிக்கா இரு பிரிவிலும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ள நிலையில், பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
