மகாராஷ்டிராவில் பால் கலப்படத்திற்கு எதிராக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தின் பூம் தாலுகாவில் நடத்திய ரெய்டில் பெரிய அளவில் பால் கலப்படம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட விற்பனைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பால் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 2,30,470 கிலோ தரமற்ற பால் பவுடர் இந்த கலப்படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பால் பவுடரை டிடர்ஜென்ட், பாம் ஆயில் மற்றும் யூரியாவுடன் கலந்து, தோராயமாக 23,04,070 லிட்டர் நச்சுத்தன்மை வாய்ந்த செயற்கை பால் தயாரிக்கப்பட்டுள்ளது.
கலப்பட கும்பல் 100 லிட்டர் தூய பாலில் 10 லிட்டர் செயற்கை பாலை கலந்துவிடுவது வழக்கம். பாலின் தரத்தை பராமரிப்பதற்காக 10% கலப்பட விகிதம் வேண்டுமென்றே பராமரிக்கப்பட்டுள்ளது.
