சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,330 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,06,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,509 ஆகவும், சவரன் விலை ரூ.1,16,072 ஆகவும் விற்பனை ஆனது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. தற்போது சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1.07 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
