சென்னை: பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அரசகுமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் சட்ட அனுமதிகளை பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசகுமாரை 2 வாரங்களுக்கு முன்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
