தமிழகம் முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இளம்பிள்ளை வாதம் பாதிப்பில்லா எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், வருகின்ற 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டு, ஐந்து வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
