சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 18) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.
சர்வதேச காரணங்களால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த வாரத்தில் திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ரூ. 1,12,560-க்கும் விற்பனையானது. செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,240-க்கு விற்பனையானது.
தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,12,480-க்கும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
