அது ஒரு வெளிப்புற ஆபத்து அல்ல, மாறாக ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தே எழும் ஆபத்து. 2021-இல் முந்தைய அரசாங்கம் கவிழ்ந்து, அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபன்கள் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
நாட்டை ஆளுவதற்கு தாலிபன்கள் அமைத்த ‘இஸ்லாமிய எமிரேட்டில்’ ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படும் “அரசாங்கத்திற்குள் இருக்கும் நபர்கள்” குறித்து அவர் எச்சரித்தார்.
கசிந்த அந்த ஆடியோ கிளிப்பில், தாலிபனின் அதி உயர் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா பேசுகையில், உட்கட்சி முரண்பாடுகள் இறுதியில் அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிடக்கூடும் என்று கூறுகிறார்.
“இந்த பிரிவினைகளின் விளைவாக, எமிரேட் சரிந்து முடிவுக்கு வரும்,” என்று அவர் எச்சரித்தார்.
