திண்டுக்கல்லில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
