ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான சூப்பர் 4 சுற்று போட்டிகள் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? என்பது குறித்து பார்க்கலாம். இந்திய அணி எப்போது விளையாடும் என்பது குறித்து தற்போது அட்டவணை வெளியாகி உள்ளது.
ஆசியக் கோப்பை 2025 தொடரின் லீக் சுற்று, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ பிரிவில், எதிர்பார்த்தபடியே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. மற்ற இரண்டு அணிகள் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் டம்மி அணிகளாகதான் இருக்கிறது.
குரூப் பி பிரிவில்தான் மூன்று அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையில் போட்டி இருக்கிறது. வங்கதேசம் 3 போட்டிகளிலும் விளையாடிவிட்டது. இதில், 4 புள்ளிகளை பெற்றுள்ளது. கடைசி லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும். இதில், இலங்கை வென்றால், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
