ஸ்வீடனின் Karolinska Institute மேற்கொண்ட ஆய்வில் 35 வயதிலிருந்தே உடல் திறன் மற்றும் வலிமை குறையத் தொடங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது.
இளம் வயதில் எவ்வளவு உடற்பயிற்சி செய்திருந்தாலும், இந்த வீழ்ச்சி தொடங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால், வயதான பிறகும்கூட உடற்பயிற்சியைத் தொடங்கியவர்கள், 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் உடல் திறனை மேம்படுத்த முடிந்தாக ஆய்வில் தகவல்.
இதற்கு முன் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட நபர்களை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக கண்காணித்ததால், மிக முக்கிய தகவல்களை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
