சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், நிர்வாக வசதிக்காக, 38 மாவட்டங்களாக செயல்படுகிறது.
இவை, தலா ஒரு மேலாளரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகிறது. வருவாய் துறையில் துணை ஆட்சியராக இருப்பவர்கள், மாவட்ட மேலாளர், பறக்கும் படை அதிகாரிகளாக, டாஸ்மாக்கில் நியமிக்கப்படுகின்றனர்.
மது கடைகளில் முறைகேடுகளை தடுக்கவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட மேலாளர்களை, அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில், மாவட்ட மேலாளர்கள், பறக்கும் படை அதிகாரிகளாக பணிபுரியும், 24 பேரை இடமாற்றம் செய்து, வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
