திண்டுக்கல் அக்ரஹார சாலை மங்கை டவரில் மசாஜ் சென்டரில்(SPA) உள்ளது.இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில்,மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்
அப்போது அங்கு அழகிகளை ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சென்னை, கிண்டியை சேர்ந்த பத்மா,திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுரேஷ்,வடமதுரை, வேல்வார்கோட்டையை சேர்ந்த சாமிநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கு இருந்த 4 அழகிகளை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
