திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியார் இ.சேவை மையத்திற்கு வந்த வாலிபர்கள் ரூ.40 ஆயிரம் பணம் வேண்டும்.அதற்கு சேவை கட்டணத்துடன் ரூ.40,800 போன் பே மூலம் அனுப்பி வைத்திருப்பதாக செல்போனில் காட்டி நூதன முறையில் ஏமாற்றி பணத்தைப் பெற்று சென்றனர்.
இதையடுத்து டவுன் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில்,சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார்,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் எட்வர்ட், போலீசார் ராதாகிருஷ்ணன், முகமதுஅலி,விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் தர்மபுரியை சேர்ந்த சபரி,சேலத்தை சேர்ந்த நெல்சன் ஆகிய 2 பேர் நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்
