டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறிவிட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 175 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென ஃபீல்டரின் கைகளில் பந்தை அடித்துவிட்டு ரன்கள் ஓட முயற்சித்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ரன்களை சேர்த்திருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 173 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் 2வது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
