தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மிக தீவிர அர்னாப் புயலாக இன்று உருவாகிறது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
