தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது.இதைத்தொடர்ந்து இன்று புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
