நடிகர் தனுஷின் நற்பணி இயக்கத்தின் முதல் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் சென்னை செம்மஞ்சேரியில் இன்று (25.10.2026) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் சிறிய அளவிலான வெள்ளி விளக்குகளை நடிகர் தனுஷ் பரிசாக வழங்கியுள்ளார். அதே சமயம் மைக் பழுது மற்றும் நிகழ்ச்சி தொடங்கத் தாமதமான சூழலில், பெண்கள் அனைவரும் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சந்திப்பு மிகக் குறுகிய நேரத்தில் நிறைவு செய்யப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாகிகள் 3,000 பேருக்கு தலா 20 கிராம் எடை கொண்ட வெள்ளி விளக்கு பரிசளிப்பு ஜிஎஸ்டி உட்பட ஒரு விளக்கின் விலை ரூ.5000 என்றால் 3,000 பேருக்கு பரிசளிக்க தனுஷ் ரூ.1.5 கோடி செலவழித்துள்ளார்
