ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமி நாளன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா உலக புகழ் பெற்ற தஞ்சாவூா் பெருவுடையாா் கோயிலிலும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு, தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னாபிஷேகத்திற்கு பக்தர்கள் வழங்கிய 1000 கிலோ அரிசி சாதமாகத் தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன. இதையடுத்து ஆயிரம் கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு 9 மணிக்கு பிறகு அலங்காரம் கலைக்கப்பட்டு, அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்காக தண்ணீரில் கரைக்கப்படும்.
