வங்கக்கடலில் இன்று உருவாகிறது அக்வான் புயல். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல்.
இன்றைய தலைப்புச் செய்திகள்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல்.
மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 காவலர்களிடமும் நீதிபதி 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை.
பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்.
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி. இரவில் நடந்த கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சியை கண்டு ரசித்த பக்தர்கள்.
