சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வரும் 20ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு புறநகர் ரயில்களானது 5, 6 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு.
நடைமேடை மாற்றப்படுவதால் அதற்கேற்ப ரயிலின் வருகை/புறப்பாடு மாறுபடும் என்பதால், மேற்கண்ட 45 நாட்களுக்கு மட்டும் தற்காலிக ரயில் அட்டவணை வெளியீடு.
கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் செல்லும் ரயில்களின் நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
