தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை, வருவாய், கடன் சுமை மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார். தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
