சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 3 வாரத்திற்கும் மேலாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலின் காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி மற்றும் கடந்த 1ம் தேதி என 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.7000 வரை அதிகரித்தது.
