கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுகவில் உட்கட்சி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தளவாய் சுந்தரத்தை கடுமையாக விமர்சித்து, சுயேச்சையாக போட்டியிடுவேன் என்றும், ஒரு ஓட்டு குறைவாக பெற்றால் தூக்கில் தொங்குவேன் என சர்ச்சையான கருத்து தெரிவித்துள்ளார்.
