“தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன.
கோவையில் கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன்”
-டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்
