நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக, நவம்பர் 30ஆம் தேதி மக்களவையையும், டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவையையும் மீண்டும் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அத்தியாவசிய அரசு அலுவல்களை மேற்கொள்வதற்காக இரு அவைகளையும் மீண்டும் கூட்டுமாறு மக்களவைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மேலும், அலுவல் தேவைகளைப் பொறுத்து இரு அவைகளின் கூட்டமும் டிசம்பர் 3ஆம் தேதி நிறைவடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், கூட்டத்தொடரை முறைப்படி முடித்து வைக்கும் நடவடிக்கையான குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் கூடிய ஒத்திவைப்பு உத்தரவு (Prorogation) இதுவரை பிறப்பிக்கப்படவில்லை
