சேலம் எடப்பாடியில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இருவரும் இணைந்து அதிமுக–பாமக கூட்டணிக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தனர்.
பரப்புரையின்போது, திமுக அதிமுகவை உடைக்க முயன்றது போல பாமகவையும் உடைக்க முயன்றதாக இபிஎஸ் குற்றம்சாட்டினார். ஆனால் அந்த முயற்சிகளை அன்புமணி முறியடித்துவிட்டார் என்றும், இனி அதிமுகவையோ பாமகவையோ யாராலும் வீழ்த்த முடியாது என்றும் பேசினார்.
அதேபோல், அன்புமணி ராமதாஸ், திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டதால் ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி, இன்னும் சில நாட்களில் இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என தெரிவித்தார்.
