ஸ்ரீவாரி பக்தர்கள் இனி வாட்ஸ்அப் மூலம் வீட்டிலிருந்தபடியே தரிசன மற்றும் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அரசு அறிமுகப்படுத்திய WhatsApp Governance சேவையின் மூலம் 95523 00009 என்ற எண்ணுக்கு “Hi” அனுப்பி, கோவில் முன்பதிவு சேவைகளை எளிதாக பெறலாம்.
திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், கனிபாகம், அன்னவரம், விஜயவாடா உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கான டிக்கெட்டுகள் இந்த சேவையில் கிடைக்கும். இந்த புதிய வசதி பக்தர்களின் நேரத்தையும் சிரமத்தையும் பெரிதும் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
