சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்கு இன்று (ஜூன் 20) காலை காவல்துறையினர் திடீரென வருகை தந்து விசாரணையில் ஈடுபட்டனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வருகையின் போது அவர் வீட்டில் இல்லை என்பதால் அங்கிருந்த ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இருப்பினும், இது குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அவரை கைது போலீசார் இந்த சோதனையை நடத்தினார்களா என கேள்வியெழுந்துள்ளது.
